Saturday, 12 September 2015

Winter cute tips - மழைக்காலத்திலும் ஜொலிக்கலாம் அழகாக!

மழைக்காலம் தொடங்கி விட்டது. எப்போதும் `நசநச’வென மழை பெய்துகொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி பிடித்து அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் போதுமானது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதேபோல், முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் கிரீமைத் தடவி மசாஜ் செய்தால், அந்த இடங்களில் பூஞ்சையின் தாக்குதல் இருக்காது.

தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு ட்ரேயில் சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.

குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.

ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். 

Friday, 22 August 2014

நகைகள் பராமரிப்பு - Jewelry Care

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது. 

மென்மையான சருமம் வேணுமா? - Wanna have smooth skin

நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமத்தை கண்டறிவது:

* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.

* மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல்.

* சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல்.

* வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.

மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:

மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

முகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

உகந்த அழகு சாதனப் பொருட்கள்:

* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது.

* பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

* கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது.

* பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.

* அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.

*எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும். 

குளிர்காலத்திற்கேற்ற சரும பராமரிப்புகள்…- Winter Skin Care

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ…

கூந்தல் பராமரிப்பு :

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங், ஆகியவற்றால், கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால், அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கூந்தலில் இயற்கையான “டைகள்’ பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலை காப்பாற்ற, “சில்க் பேப்ரிக்’ துணிகளை பயன்படுத்தலாம்.

சருமப் பராமரிப்பு:

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக,சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.

* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

* தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம்.

* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.

* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உ<தவும். மிகவும் சூடான நீரில் குளிப் பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.

* குளிர்காலத்தில் பெரும்பாலானவர் களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உ<தட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். 

பெண்களுக்கு உடற்பயிற்சி - Exercise for women

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும். 

ஆடைக்கேற்ற அழகான காலணிகள் - matching dress and beautiful shoes

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்க சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.

ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும்.

பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.

2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை. அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம். ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது.

மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.

காலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம். இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.

சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள்.

காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.

மென்மையான கைகள் வேண்டுமா… - Want soft hands

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ் கள் இதோ…

கைகள் பராமரிப்பு:

முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

*கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், மேலே சொன்ன படி கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும்.

* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.

அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.

Beauty affect acne? - முகப்பரு அழகைப் பாதிக்குமா?

ஆம், உண்மைதான். அழகு பாதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு விதமான தாழ்வுமனப்பான்மையும், எரிச்சல் போனறவையும் ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுவும் முகப்பரு ‘ அடலசண்ட் ‘ பருவத்தில் ஏற்படுவதால் தோழிகளிடம் பழகுவதற்கே தயக்கம் ஏற்படும். தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் அதிகப்படியான கொழப்புகள், எண்ணெய் பசையாக வெளியேற்றுகிறது. முகத்தில் உள்ள சிறு சிறு துவாரங்கள் இந்த எண்ணெய் பசையால் அடைக்கப்படுகின்றன. சருமம் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறது.இந்த எண்ணெய் பசையில் படும் தூசு, காற்று இவற்றினால் பரு உருவாகிறது.அடலசண்ட் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களினாலும், உடல் உஷ்ணம் அதிகரிப்பதினாலும், மலச்சிக்கலாலும் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு ஒரு வித தோல் வியாதியின் வகை என்றும் கூறலாம்.இந்த பருக்களை சொறிவதோ, கிள்ளுவதோ கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகவும், பருக்களின் வடுக்கள் நிரந்திரமாகத் தங்கி விடவும் வாய்ப்பு உண்டு.
ஓய்வில்லாமை, தவறான உணவுப்பழக்கம், போதைப் பொருள், மனக்கவலை போன்ற காரணங்களாலும் பருக்கள் தோன்றலாம். காலையில் போட்ட மேக்கப் கலைக்கப்படாமல் இருப்பதாலும் பருக்கள் உருவாகிறது. இரவு எந்நேரம் ஆனாலும் ‘ மேக்கப் ‘ ஐ கலைத்து விட்டு உறங்குவது என்ற நல்ல பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

தடுப்பு நடவடிக்கைகள்

வெள்ளரிக்காய்களை பச்சையாகவோ, சமைத்தோ அடிக்கடி சாப்பிடலாம். கீரைவகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடைகிறது. இளநீர் அதிகம் பருகலாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவைகளை உணவில் சேர்த்து கொள்ள தயங்கக்கூடாது. அடிக்கடி மருந்து மாத்திரைகளை உண்பதால் மலச்சிக்கல் ஏற்படும்.
இதைத் தவிர்க்க எலுமிச்சை சாறுடன், சிறிது உப்பு, நீர் சேர்த்து பருகிவிட்டு, சிறிது காலாற நடக்கலாம்.

காலையில் சூரிய ஒளி படும்படி நிற்க , சூரிய ஒளி சக்தி பரு, கரும்புள்ளிகளை போக்குகிறது. பொடுகு இருந்தாலும் முகத்தில் பரு வரலாம்.

எனவே தலையை அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் வாரம் இருமுறை தலையை அலசி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

* 1 கிராம் புனுகு,1 அவுன்ஸ் நல்லெண்ணெய், சில துளி சந்தன தைலம் கலந்த கலவையைப் பஞ்சில் நனைத்து தடவலாம். விரல் நகம் படாமல் தடவ வேண்டும்.

* ஓரிஃபிளேம், ஆன்ட்டி பிளமிஷ் க்ரீமும் தடவலாம்.

* வேப்பிலை அரைத்து தடவி ஊறியவுடன் பயத்த மாவு தேய்த்துக் குளிக்கலாம்.

* வெள்ளரியை விழுதாக்கி குளிரவைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு, மஞ்சள்தூள் இவற்றுடன் நீர் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி கழுவவும்.

* முகத்தில் பரு உள்ளவர்கள் மென்மையான ‘ சோப் ‘ பையே உபயோகிக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை இளஞ்சூடான நீரில் முகம் கழுவலாம். எளிதான, அளவான உடற்பயிற்சி கூட அவசியம்.

* முகத்தில் பருக்கள் போன்ற ‘மரு’வும் தோன்றுகிறது. அதாவது கரும்புள்ளி, இவை மூக்கு, நெற்றி தாடைகளை உறைவிடமாக கொண்டுவரும் . இதுவம் பெரும்பாலும்
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையினால் தான் வரும்.

* இதில் தூசு படிந்து ஆரம்பத்தில் வெள்ளைப் புள்ளிகளாகவும், நாளடைவில் கரும்புள்ளிகளாகவும் மாறிவிடும். நாள்பட நாள்பட ஆழமான புண்ணாகவும் மாறிவிட வாய்ப்புள்ளது.
இதற்கு ‘சிட்டி சோடியம் கார்பனேட்’ ஐ இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் துண்டை நனைத்து பிழிந்து ஆவியை மட்டும் கரும்புள்ளி உள்ள இடங்களில் ஒற்றி எடுக்கவும். இதனால் துவாரம் இறுக்கம் தளர்ந்து விரிவடையும்.

இப்போது தோலில் உள்ள தூவாரங்கள் அடைக்கப்பட வேண்டும் எப்படி-?

* முட்டையின் வெள்ளைக்கரு, மாய்ச்சரைஸ் க்ரீம் இரண்டையும் ஒன்றாக கலந்து தடவி லேசாக மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* ஓட்ஸ் மாவுடன் தயிர் அல்லது எலுமிச்சைச் சாறு சில துளிகள் கலந்து தடவி மசாஜ் செய்யவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மட்டியுடன் நீர், வெள்ளரிச்சாறு கிடைக்காவிட்டால் எலுமிச்சை சாறு சிலதுளி கலந்து நன்கு குழைத்து முகத்தில் தடவவும். பின்பு இளஞ்சூடான நீரில் முகம் கழுவியவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நீங்களும் அழகிதான்

Matching Tops for Jeans - ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ்

புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார்.சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம்தான்.
தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டிசர்ட்டிற்கு மாறினர். எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளித்தன. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருந்தது.தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அனியப்படும் ஆடையாக மாறியது. பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியின் கழுத்துக்களை சுடிதார் கயிற்றால் இறுக்கிக் கொன்றன.

தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே வெகுவாக மறைந்து முற்றிலுமாக கிழிந்து விட்டது..

சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம்.

பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.

பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர். பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக் கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம்.

அல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன.

எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது.

கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள்.

ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம்.

உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும்.

ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம். 

Femina Miss India Ekta Chaudhary Miss athletic secret- கட்டுடல் ரகசியம்-பெமினா மிஸ் இந்தியா அழகி ஏக்தா சவுத்ரி

பெமினா மிஸ் இந்தியா அழகி ஏக்தா சவுத்ரி தனது உடல் ரகசியங்களை இங்கே கூறுகிறார்: என்னுடைய பிட்னஸ்க்கு காரணம் பரதநாட்டியம், நடைபயிற்சி, தியானம் ஆகியவை. எக்காரணம் கொண்டும் இவற்றிற்கு நான் விடுமுறை அளிப்ப தில்லை.

எந்தவொரு விஷயத்தைம் எனக்குள் நான் திணிப்பதில்லை. எனக்கு விருப்ப மான, ஆர்வமான விஷயங்களில் மட்டுமே என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன். அப்படித் தான் உடற்பயிற்சி என்பதும்… தினமும் கண்டிப்பாக செய்யும் ஆர்வமான விஷயங்களில் இதுவும் ஒன்று.

உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் என்னுடைய செல்போனை `ஆப்’ செய்து விடுவேன். யாருடனும் பேசவும் மாட்டேன். அந்த அளவுக்கு உடற்பயிற்சியில் என்னை அர்பணித்து விடுவேன்!

எனக்கு பிடித்த உடற்பயிற்சிகள் என்றால்… நடைபயிற்சி, நடனம் மற்றும் ஸ்பின்னிங்(சுழலும் பயிற்சி)

அழகுக்காக தினமும் நிறைய தண்ணீர் குடிப்பேன். பிரஷ்ஷான காய்கறிகளை சாப்பிடுவேன். கிரீன் டீ குடிப்பேன்.

ஜிம்முக்கு செல்லும்போது என்னுடைய கைபையில்… கேட்டோரேட், மிதமான சூட்டில் முகம் துடைக்கும் துண்டு, பாடி வாஷ், பாடி ஸ்க்ரப், பாடி லோஷன் மற்றும் டியோடரன்ட் ஆகியவை இருக்கும்.

ஆரோக்கியமான, சத்து வாய்ந்த உணவை தினமும் ஆறு முறை சாப்பிடுவேன். முறையற்ற டயட்டிங் என்பது உடலை சீர்குலைத்து விடும். அதே போல் முறையான உணவு இல்லாமல் கடுமையான உடற்பயிற்சியும் கூடாது. காய்கறிகள் இவை எல்லா வற்றுக்கும் உதவும்.

ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப் வேண்டாம். உடற்பயிற்சி செய்யும்போது மேக்கப் இல்லாமல் இருந்தால், வியர்வைகள் நன்றாக வெளியேறும். கழிவுகள் வெளியேறி சருமம் சுத்தமாகி விடும். இதன் முலம் முகம் மிக அழகாக மாறிவிடும்.

உடற்பயிற்சி முடிந்தவுடன், உடலில் ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடுகட்ட, போதிய உணவை சாப்பிட்டு விடுவேன். எனக்கு சின்ன வயதிலிருந்தே பிட்னஸ் குறித்த டிப்ஸ்களை வழங்கியது அம்மாதான். அவர் அடிக்கடி என்னிடம் சத்தான உணவுகளை சாப்பிடுமாறு ஆலோசனை வழங்குவார். தினமும் ஒரு டம்ளர் பால் சாப்பிடுமாறு அப்பா அறிவுறுத்துவார்.

எனக்கு பிடித்த உணவு பாலாடை மற்றும் ஒயின்! 

Eye catching Color shoes - கலர் கலராய் கவரும் காலணி

ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல; விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது.

எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

எனக்கு தெரிந்த ஒரு பெண் சற்று உடல் எடை அதிகமாக கொண்டவர். இப்போதெல்லாம், டி.வி. நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்துபோகும் மாடல்கள் ஒய்யாரமாக அணிந்துவரும் ஹீல்ஸ் செருப்பை தானும் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை.

அந்த மாடல் செருப்பு தனக்கு ஒத்து வருமா? என்ற சந்தேகத்துடன், பெரிய ஷோரு ம்களுக்குச் சென்று தேடிபிடித்து அதை வாங்கி வந்துவிட்டார். அவரது கால் சைசுக்கு தகுந்தாற்போல் பெரிய அளவிலேயே ஹீல்சை தேர்வு செய்திருந்தார்.

எதற்கும் ஹீல்சை பார்ட்டிகளுக்கு அணிந்து போவதற்குமுன், வீட்டில் அதை போட்டுக்கொண்டு கொஞ்சம் டிரெய்லர் பார்ப்போமே… என்ற எண்ணத்தில், அதை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடக்க முயற்சித்தார்.

ஆனால், முதல் அடியே பலமாக விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு காலை ஹீல்சுக்குள் விட்டவர், இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் தொபுக்கடீர்னு கீழே விழுந்து அடி வாங்கிக்கொண்டதுதான் மிச்சம்.

பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.

எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு ஆரம்பம் ஒன்று இருக்கும். இந்த செருப்புக்கு என்றும் வரலாறு உண்டு.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர். அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள்தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்துகொண்ட பெருமைக்கு உரியவர்கள்.

இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக கோர்த்து, அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான், பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நுறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கபட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.

செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.

இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.

எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள்.

இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன.

இந்த செருப்பு வகைகளுடன் மேரி ஜேன் என்ற செருப்பும் இன்றைய புட்வேர் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த செருப்பை வடிவமைத்து உருவாக்கியவர் அமெரிக்க பெண்ணான மேரி ஜேன். அவரது பெயரிலேயே அவர் உருவாக்கிய செருப்பு அழைக்கபடுகிறது. ப்யூர் லெதரால் உருவாக்கப்படும் இந்த செருப்பு, அதை அணிந்து கொள்ளும் பெண்களின் கால்களை கடிக்காது. மாறாக, மென்மையை கொடுக்கிறது.ஹீல்ஸ் வகை செருப்புகள் பெண்களுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றன. குட்டையான பெண்கள் அதை அணிந்துகொண்டால் உயரமான பெண்ணாகி விடுகிறார்கள்.

இந்த ஹீல்ஸ் வகை செருப்பை அணிந்து கொண்டால் முட்டு வலி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். பொருத்தமான ஹீல்சை தேர்வு செய்து அணிந்தால் இந்த பயம் தேவையில்லை. புதிதாக ஹீல்சை அணியும்போது வலி இருக்கலாம். நாளடைவில் அது சரியாகிவிடும். புதிதாய் எந்த செருப்பு வாங்கி அணிந்துகொண்டாலும் கடிக்கும்தானே…?

ஹீல்சில் பிளாட் மற்றும் பாயின்ட்டட் மாடல்கள் இன்று நிறைய கிடைக்கின்றன. 40 முதல் 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்கள் மாத்திரமே பாயின்ட்டட் மாடல் ஹீல்சை அணிந்துகொள்ளலாம். மற்றவர்கள் அணிந்தால் சிரமமாக இருக்கும். நடக்கும்போது கால் இடறி விழுந்துவிடக்கூடும். அதேநேரம், பிளாட் மாடல் ஹீல்ஸ்களை எந்த வயதினரும், எவ்வளவு உடல் எடை கொண்டவர்களும் அணிந்து கொள்ளலாம்.

மேலும், ஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த விஷயங்கள் : ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும். பாயின்ட்டட் ஹீல்ஸ் தேர்வு செய்யும்போது, அதில் உள்ள ஹீல்சின் உயரம் 2 முதல் 4 இஞ்ச் வரை மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வது (நடந்து செல்வதற்கும், உடல் நலத்திற்கும்) நல்லது.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி ஒர்க் செருப்புகள் உள்ளன. இவற்றை மிகச்சிலரே விரும்பி அணிகின்றனர்.

பாலிவுட் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர், தங்களைவிட உயரமான தீபிகா படுகோனே, சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய் போன்றோருடன் நடிக்கும்போது பிளாட் மாடல் ஹீல்ஸ் அணிந்து கொள்கின்றனர்.

Beautiful Costumes - அசர வைக்கும் அணிகலன்கள்

ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. நாம் அணிந்திருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து அணியும்போது, நம்மை பார்ப்பவர்கள் முக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே, உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களைத் தேர்வு செய்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அணிகலன்கள் நமக்கு ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.நகைகளை மட்டுமே அணிகலன்கள் என கருதக் கூடாது. நகைகளோடு சேர்ந்து காலணிகள், ஹேட் பேக், கண்ணாடி, வாட்ச், பெல்ட், ஸ்கார், வாசனைத் திரவியங்கள், துப்பட்டா, பெல்ட், தொப்பி, கர்ச்சப், டை போன்றவையும் அந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை நகைகளே. இன்றைக்கு நகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த, அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன.

பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரைக் கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மரம், கண்ணாடி, சணல், பேப்பர் போன்றவற்றில் தயாரான நகைகள் பிடிக்கும்.

எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறைம் உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டுபுடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை போன்றவற்றை அணியலாம். அப்படி இல்லாமல் பட்டுபுடவை கட்டி மெல்லிய செயின், மரம், கண்ணாடிகளால் ஆன நகைகளை அணிந்து கொடால் பார்க்க சிறப்பாக இருக்காது.

இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தபடும் நேரத்தாலும், தயாரிக்கபடும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

பார்மல்: திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் போன்றவை இதில் குறிபிடத்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கபடுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவைம் இந்த நகைகளில் பயன்படுத்தபடுகின்றன.

கேஷுவல்: தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படை யாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.

ரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிபிடத்தக்கது.

ஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஸ்பிரிச்சுவல்: மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.

Benefits of Excercise - உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

உடல் செழுமையும் வளமும் பெற

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4

மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி 5 முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.

இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும். ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

For Winter Glow ...பனிக்கால பளபளப்புக்கு…

டிசம்பர் தொடங்கியாச்சு… இனி பனிக் காலம்! பெண்களின் சருமம் பனிக் காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.

அதற்கு காரணம்…?

சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படு மந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

பனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைத் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.

உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டு பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.

பனிக் காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பனிக் காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.

உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.

பெண்கள் உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெணை, கடுகு எண்ணை ஆகியவை சிறந்தது.

சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.

பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் ழுழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்’ தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

தேங்காய் எண்ணை, பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேயப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

பனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கபடும்.

முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரபிகள் ஓரளவு சுறுசுறுபடையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும். 

Want to remove facial hair? - முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?

சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.

முகத்தில் முடிகள் தோன்ற காரணம்:

பெண்களுக்கு முகத்தில் முடிகள் தோன்ற முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை. பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது, இந்த இரண்டு வகை ஹார்மோன்களின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சமநிலையின்மை தோன்றுகிறது. இதனால், சில நேரங்களில், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு. சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும், முகத்தில் அடர்த்தியான முடிகள் உருவாவது உண்டு. இதற்கு சிறந்த தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், முகத்தில் முடிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: கருவி கொண்டு நீக்குதல்: முகத்தில் உருவாகும் முடிகளை, “ட்வீசர்’ என்னும் கருவி கொண்டு நீக்கும் முறையில், மிக விரைவாகவும், குறைவான விலையிலும் நீக்கலாம். போதிய வெளிச்சத்தில், முகத்தின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் காணப்படும் முடிகளை, “ட்வீசர்’ மூலம் எடுத்து விடலாம். அதன் பின், அந்த பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவத்தால் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய முறையால், அப்பகுதிகளில் எரிச்சல் உ<ண்டாகும் வாய்ப்பு உள்ளது.

ஹேர் ரிமூவிங் கிரீம்: ஏதேனும் பார்ட்டி அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசர நேரத்தில், மிக விரைவாக முடிகளை நீக்க, ஹேர் ரிமூவிங் கிரீம்கள் பயன்படுகின்றன. இந்த கிரீம்கள், கைகள், கால்கள் மற்றும் அக்குள் ஆகிய பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன், அவற்றால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுமா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

வாக்சிங்: தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் மிகப் பிரபலமான முறை வாக்சிங். ஏனென்றால், இதற்கு மிக குறைவாக செலவாவதுடன், மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பலன் அளிக்கிறது. வாக்சிங் செய்து முடித்த பின், செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதுடன்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரால், சருமத்தின் துளைகள் திறந்திருப்பதால், தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளீச்சிங்: முகத்தில் முடிகள் தோன்றும் பிரச்னையை சமாளிக்க ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், முகத்தில் காணப்படும் முடிகள் வெளுத்து, அவை எளிதில் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாது. ப்ளீச்சிங் சருமத்தை வறண்டு போக வைப்பதால், நல்ல மாய்ச்சரைசர் கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.

மருத்துவ முறைகள்:

எலக்ட்ரோலிசிஸ்: இந்த முறையில், ஊசியை தோலில் செலுத்தி, குறைந்த அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி, அதன் மூலம், முடிகளின் வேர் முடிச்சுகள் அழிக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை சிறியளவிலேயே பலன் தருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

லேசர் சிகிச்சை: லேசர் முறையில், முகத்தில் தோன்றும் முடிகளை வலியின்றி நீக்கலாம். இதன் பலன் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு தடவை, நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் நீக்கப்படும். இச்சிகிச்சைக்கான செலவு அதிகம். இச்சிகிச்சையால் சில விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது 

Dishes for early adulthood - இளம்பருவத்திற்கு தேவையான உணவுகள்

அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடிம்.

சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரைம், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாபிட்டு குடாக இருப்போரைம் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது.

நீங்களும் அழகான, வாளிபான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா? தொடர்ந்து படிங்கள்…

இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதபடும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.

வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்களை குறிக்கும். இவர்கள் உடலில் வேகமான வளர்ச்சி 91/2 வயதில் தொடங்கி 131/2 ஆடுகள் வரை தொடர்கிறது.

பொதுவாக ஒரு பெண் சராசரியாக 121/2 வயதில் பூப்பெய்துகிறாள். அவளது உடலில் பெரிய அளவிலான வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது.

இவர்களுக்கான சத்தான உணவு பரிந்துரைகளின் பட்டியல் 10 முதல் 12 வயது, 13-15 வயது, 16-18 வயது என்ற 3 பிரிவுகளாக

உள்ளது.வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தைம், பொதுவான எடையில் 53 சதவீதத்தைம், உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தைம் எட்டியிருப்பார்கள்.

அந்த வளர் இளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் எடை இரு மடங்காக உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரைம், கொழுபு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாயப்பு உண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிப்பு நேரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. கருமுட்டை உற்பத்தி சுழற்சியைம், கால்சியம் அளவை 300 கிராம் முதல் 750 கிராம் வரையிலும் பராமரிபதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.

எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பானது வலிமை குறைந்துபோகும். அது, உடலின் எடையை தாங்க முடியாமல் பிரச்சினை ஏற்படலாம்.

இன்றைய வளர் இளம் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியது இருக்கிறது.

அதாவது… சாப்பிடுவதற்கு எதைத் தேர்வு செய்வது என்பதில் பெரிய அளவில் கட்டுப்பாடு வைத்துக்கொள்வது தங்கள் வயதை ஒத்தவர்களின் கருத்துகள் மற்றும் செயல்களால் தீவிரமாக ஈர்க்கப்படுதல் மது குடிக்க, புகை பிடிக்க மற்றும் முளையை பாதிக்கும் வகையில் நரம்பு மடலங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மருந்துகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகுதல் ஸ்லிம் ஆக இருபதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்ற எண்ணத்தை சிலர் ஏற்படுத்தி விடுதல். உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருத்தல் பெற்றோரின் உணவு பழக்கத்தில் இருந்து மாறுபட்ட உணவு பழக்கத்தை பின்

பற்ற வேண்டும் என்று கருதுதல்.

இவர்கள் பின்பற்றும் மேலும் சில பழக்கவழக்கங்களும் அவர்களது உடல் சக்தியை குறைத்து விடுகின்றன.

சுப்பாட்டை குறிப்பாக, காலை உணவை தவிர்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது, சாப்பிடத் தயார் நிலையில் விற்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் அதை வேகமாக சாப்பிடுவது, குடும்பத்தில் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத, வழக்கத்துக்கு மாறான கலப்பில் உணவு சாப்பிடுவது, உணவு வகைகள் மீது விருப்பு-வெறுப்பு காட்டுதல், பாட்டில்களில் அடைத்து விற்கபடும் குளிர்பானங்களை அதிக அளவில் குடிப்பது, மது அருந்துதல் ஆகியவை அந்த பழக்க வழக்கங்களில் இடம் பெறுகின்றன.

அதனால், வளர் இளம்பெண்கள் சத்தான உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது சத்துணவு நிபுணர்களின் கருத்து.

அதற்கு என்ன செய்யலாம்? அந்த வளர் இளம் பருவ வயதில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்கு தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றி உட்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் காலத்தை கணிப்பது மற்றும் கருத்தடை மருந்து பயன்படுத்துவது பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுக்க வேடும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய வேடும். அதை வராமலும் தடுக்க வேண்டும். உடல் எடை கூடுகிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அடிக்கடி கண்காணிக்க வேடும். தினமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 2,500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். சத்து குறைவான உணவு அல்லது வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடும் விவரங்களை கண்டறிவதும், சாப்பிடுவதில் உள்ள குறைகளை மனோரீதியாக கண்டறிந்து, அதற்கேற்ற உணவு வகைகளை பரிந்துரைப்பதும் அவசியமான ஒன்றுதான்.

மேலும், உடலுக்கு தேவையான சத்து கிடைபதை உறுதி செய்யும் வகையில் நம்பகமான வழிமுறைகளை உருவாக்கி, அதை பின்பற்ற வேடும்.

அதற்காக, பலவகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது குறைவான கொழுபுச்சத்து கொண்ட உணவு வகைகளை தேர்வு செய்வது காய்கறிகள், பழங்கள், தானியங்களை அதிகமாக சாப்பிடுவது கணிசமான அளவுக்கு சர்க்கரை மற்றும் சோடியம் உள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

வளர் இளம் பருவ பெண்கள்

இனி என்னென்ன சாப்பிடலாம் என்பது பற்றி பார்போம்…

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம் பெண்கள் தினமும் 260 முதல் 320 கிராம் வரையிலும், 13 முதல் 15 வயது வரையில் உள்ளவர்கள் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதியில் உள்ளவர்கள் தினமும் 290 முதல் 350 கிராம் வரையிலும் தானியங்கள், தினை, சாமை உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டின் நிறைந்த பயறுகள், பயறு காய்கள், அவரை வகைகளை 10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெகள் தினமும் 30 முதல் 70 கிராம் வரைம், 13 முதல் 18 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் 50 முதல் 70 கிராம் வரைம் எடுத்துக்கொள்ள வேண்டும். புரோட்டினுக்கு மாற்று உணவாக அசைவத்தில் கறி, மீன் மற்றும் முட்டை – இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 முதல் 60 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள் அதற்கு பதிலாக, முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 30 முதல் 50 கிராம் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களும் புரோட்டின் கிடைக்க உதவும்.

டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் 5 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பச்சை இலை காய்கறிகள்.

2. வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

3. கிழங்குகள் – தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.

4. குருப் – 1 காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

5. குருப் – 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளைம் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குருப் – 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரைம், கு 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரைம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்கறிகளை போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றைம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

- இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம். 
Related Posts Plugin for WordPress, Blogger...