Friday, 22 August 2014

குளிர்காலத்திற்கேற்ற சரும பராமரிப்புகள்…- Winter Skin Care

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ…

கூந்தல் பராமரிப்பு :

குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.

அதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது.

குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.

அடிக்கடி ஹேர் கலரிங் செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங், ஆகியவற்றால், கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால், அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கூந்தலில் இயற்கையான “டைகள்’ பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலை காப்பாற்ற, “சில்க் பேப்ரிக்’ துணிகளை பயன்படுத்தலாம்.

சருமப் பராமரிப்பு:

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக,சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.

* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

* தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம்.

* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.

* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உ<தவும். மிகவும் சூடான நீரில் குளிப் பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.

* குளிர்காலத்தில் பெரும்பாலானவர் களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உ<தட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும். 

பெண்களுக்கு உடற்பயிற்சி - Exercise for women

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் அழகாகவே இல்லை,குண்டாக வேறு இருக்கிறோம். நம்மால் அழகாகத் தோற்றம் அளிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள், எப்போதுமே ‘ பாஸிடிவ் அப்ரோச்’ தான் எல்லாவற்றிலும் நல்ல பலனை அளிக்கும்.

நம் உடலில் எங்கெங்கு குறையிருக்கோ அதனை நாம் நமது உடற்பயிற்சியின் மூலமும்,மிதமான, அதே சமயம் நாகரிகமான ஒப்பனையின் மூலமும் நிவர்த்தி செய்ய இயலும்.

உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது.

வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும்.

நமது உடல் வாகு, முகத்திற்கேற்ற தலையலங்காரம் ஒப்பனையில் சிறிது அக்கறை இருந்தாலே போதும் நாமும் அழகிதான். லிப்ஸ்டிக் கலர்,முகப்பவுடர் போன்றவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

உடையைப் பொறுத்தவரை அனைவருக்குமே ‘ ட்ரெஸ்ஸிங் சென்ஸ் ‘ இருப்பது அவசியம்.அனைவருமே ஆடை வாங்குகிறார்கள்.உடுத்திக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே ஆயிரம் பேருக்கு நடுவிலும் அழகு தேவதையாக வலம் வருவார்கள். காரணம் அவர்களிடம் அனைத்தையும் மீறிய ஒரு’ க்ரியேட்டிவ்சென்ஸ்’ இருக்கும்.அதுதான் அவர்களது ‘ஸ்பெஷாலிட்டியே’.

நம்மாலும் அந்த க்ரியேட்டிவிட்டியை வளர்த்துக் கொள்ள முடியும். எதற்குமே முயற்சிதான் காரணமாகிறது. முயற்சியுடையோர்… அதே தான்.

உயரமானவர்களுக்கு கட்டம் போட்டது போலும் , பெரிய பூக்களை உடையது போன்றும் உள்ள ஆடைகள் அழகான தோற்றத்தையும், மிதமான உயரமானவர்களுக்கு அவர்கள் நீண்ட வாகில் கோடுகள் போட்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பார்களேயானால் இன்னும் உயரமாக இருப்பது போன்ற தோற்றம் தரும்.

குள்ளமாக உள்ளவர்களுக்கு நீள வாக்கில் கோடு போட்டதும், சிறு சிறு பூக்களை உடைய ஆடையே அவர்களை உயரமாகக் காண்பிக்கும். குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போட்டதற்கு முன்னுரிமை அளித்தல் அவர்கள் மிகவும் குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

கலர் விஷயத்திலும் அப்படியே. கலராக இருப்பவர்களுக்கு லைட்,டார்க் என்று எந்த கலர் ஆடையை வேண்டுமானாலும் அவர்கள் கட்டி அசத்த முடியும்.

மாநிறமாகவும், கருப்பாகவும் உள்ளவர்கள் கலர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். மிகவும் டார்க் கலரையோ, மிகவும் லைட்டான கலரையோ தெரிவு செய்தல் கூடாது. மிதமான கலராகப் பார்த்து உடுத்தினால் அவர்களும் நல்ல நிறமாக தோற்றம் அளிக்க இயலும்.

உயரமானவர்கள் மெல்லிய ஸ்லிப்பரும், குள்ளமானவர்கள் ஓரளவு ஹீல்ஸ் உள்ள செருப்பையும் அணியலாம். அதிகப்படியான ஹீல்ஸ் முதுகு வலி,இடுப்பு வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தி விட்டு விடும். 

ஆடைக்கேற்ற அழகான காலணிகள் - matching dress and beautiful shoes

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்க சென்ற கடையில், கிழிந்த செருப்பைக் காட்டி இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது.ஆடையின் நிறத்திற்கேற்ற செருப்பு, அதிக உயரம் கொண்ட குதிக்கால் செருப்பு, கால்களை முழுவதும் மூடிக் கொள்ளும் கட் ஷ, மெல்லிய லேஸ்களைக் கொண்ட தளர்வான செருப்பு, பெரிய கற்கள் பதித்தவை, துணியால் அலங்கரிக்கப்பட்ட காலணிகள் என பலப் பல வகைகளில் காலணிகள் சந்தைகளில் குவிகின்றன.

ஒவ்வொன்றும் தரத்திற்கும், அழகுக்கும் ஏற்ற விலைகளில் கிடைக்கின்றன. குறைந்த விலையிலும் அழகான காலணிகளை வாங்கிச் செல்ல முடியும்.

பாதங்களின் அழகைக் கூட்டும் விதத்திலும் காலணிகள் கிடைக்கின்றன. இதிலும் மணப் பெண்களுக்கு என்று சில காலணிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன.

2000 ரூபாயில் இருந்து துவங்கும் இதன் விலைகள் எந்த இடத்திலும் நிற்பதில்லை. அதாவது திருமண ஆடையின் நிறத்தில், அதில் உள்ள வடிவமைப்புக்கு ஏற்ற வகையிலும், மணப்பெண் அணியும் நகைக்கு ஏற்ற வகையிலும் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

விருந்து நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிக்கு செல்வதென்றால் ஆடம்பரமான காலணிகளை அணிந்து கொண்டு அனைவரையும் அசத்தலாம். ஆனால் தினமும் அலுவலகத்திற்கு அணிந்து செல்வதற்கு இவை எல்லாம் சரிபட்டு வராது.

மிகவும் நலினமாக, ஆனால் பார்ப்பதற்கே கொஞ்சம் விலை கூடுதல் போல என்று நினைக்க வைக்கும் வகையில் காலணிகள் வந்துள்ளன. சாதாரண தோற்றத்தில் நல்ல தரத்துடன் அணிவதற்கு சுகமானதாகவும் அலுவலக பயன்பாட்டிற்கு பல வகைகளில் காலணிகள் இடம்பிடித்துள்ளன.

காலணிகள் என்றதும் குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும். விளக்கொளியில் மின்னும் செருப்பு, ஒலி எழுப்பும் செருப்பு, சிறுவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை இணைத்திருக்கும் வகை, பெண் குழந்தைகளுக்குப் பிடித்த வண்ண வண்ண மணிகளைக் கொண்டவை, புசுபுசுவென தோற்றமளிக்கும் செருப்புகள் என ஏராளம் ஏராளம். இதிலும் விளையாட்டு வீரர்கள் அணிந்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் ஆண் குழந்தைகளுக்கு என பல்வேறு விதங்களில் செருப்புகள் வந்துள்ளன.

சந்தையில் பல வகைகளில் காலணிகள் வந்தாலும் நமக்கென்று ஒரு தேர்வு உள்ளது. உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அணியுங்கள்.

காலுக்கும், காசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் உங்களது தேர்வு இருக்கட்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...